சர்க்கரை நோயாளிகளுக்கு சுவையான உளுத்தங்கஞ்சி செய்வது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


மிகவும் சுவையான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 200 கிராம்
அரிசி - 80 கிராம்
பனங்கருப்பட்டி - 2 கப்
சுக்கு பொடி - 1/2 டீ ஸ்பூன்
ஏலக்காய் - 3
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி 

செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து உளுத்தம் பருப்பை குறைவான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

பின்பு அந்த உளுத்தம் பருப்பை நன்றாக கழுவி அரிசியும் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். அதற்குப்பின் மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்ததும் துருவிய பனங்கருப்பட்டியை சேர்த்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், சுக்குப்பொடி சேர்த்து, 2 சிட்டிகை உப்பு சேர்த்து கொதித்ததும், அரைத்து வைத்த உளுந்து கலவையை இதில் சேர்த்து நன்றாக வேக விடவும். 

பின்பு வடிகட்டின பனங்கருப்பட்டி கரைசலை ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி விடவும். வாசனைக்கு மூன்று ஏலக்காயை பொடிச் செய்து தூவி விடவும். இறுதியாக துருவிய தேங்காயை தூவி விட்டு கிளறி இறக்கினால் சுவையான உளுத்தங்கஞ்சி ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delicious urad dal porridge receipe


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->