சீரகம் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் தீங்கு பற்றி உங்களுக்கு தெரியுமா? தவறாமல் இதை படியுங்கள்.!!!
தவறாமல் இதை படியுங்கள்
சீரகத்தில் அதிக அளவில் மருத்துவ குணம் உள்ளது. மேலும், சமையலில் சீரகத்தை தவிர்க்க முடியாது.
அதற்கு காரணம், நாம் எந்த உணவை சாப்பிட்டாலும் சீரகம் செரிமானம் செய்ய வைத்திடும்.

ஆனால், சீரகத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டுவந்தால் பல தீங்குகள் ஏற்படும்.
இந்த பகுதியில் அவற்றை பார்க்கலாம்:-
சீரகம், நெஞ்செரிச்சலை உண்டாக்கும். இதனால் அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை குறைவாக சாப்பிடுவது நல்லது.
அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் ஏப்பம் வந்துகொண்டே இருக்கும்.

தொடர்ந்து அதிக அளவில் சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும்.
மேலும், சீரகத்தில் இருக்கும் எண்ணெய் அதிக அளவில் ஆவியாவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்படைகிறது.
அதிலும் குறிப்பாக, கர்ப்பிணி பெண்கள் சீரகத்தை சாப்பிடுவதும், சீரக தண்ணீரை குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

இது குறை பிரசவம் உண்டாகுவதற்கும், கருச்சிதைவு ஏற்படுவதற்கும் காரணமாக உள்ளது.
அதனோடு, மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிக அளவு சீரகத்தை எடுத்துக்கொண்டால், அது ரத்தப்போக்கை அதிகமாக ஏற்படுத்தும். எனவே இது மாதிரியான நேரங்களில் சீரகத்தை தவிர்ப்பது நல்லது.
English Summary
If you eat too much of the cumin you will have a lot of harm.