வயிற்று வலி ஏற்பட காரணம் மற்றும் தடுக்கும் முறைகள்...!
Causes of stomach pain and ways to prevent it
வயிற்று வலி என்றால் என்ன?
வயிற்று வலி பொதுவான நோயாகும். பெரும்பாலான நேரங்களில் இது ஆபத்தில்லாதது போல தோன்றும். ஆனால், சில கடுமையான நோய்களுக்கு இது அறிகுறியாக அமையும்.
காரணங்கள் :
வயிற்றில் குடல்புண், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, செரிமான குறைபாடு, நச்சுணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத்தொல்லை, குடல் அழற்சி, குடல் வால் அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி மற்றும் பித்தப்பைக் கற்கள் போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றுவலி ஏற்படும்.

மேல் வயிற்றில் வலி உண்டானால், அது இரைப்பைப் புண் அல்லது இரைப்பை அழற்சி காரணமாக இருக்கும்.
இரவு நேரத்தில் மட்டும் வயிற்றுவலி வந்தால் அதற்கு குடல்புழு காரணமாகும்.
வயிற்று வலி வராமல் தடுக்கும் முறைகள் :
ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி ஏற்படாமல் தடுக்கலாம்.
உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் உணவு செரிமானம் அடைவதோடு, உடல் எடையும் குறையும். வேகமாக சாப்பிட்டால் உடலில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலி ஏற்படும்.
உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வயிற்றுப்புண், மாதவிடாய் உட்பட எல்லா வயிற்று வலிகளுக்கும் ஒரு கண்ணாடி பாட்டிலில் வெந்நீரை நிரப்பிக்கொண்டு, அதை ஒரு துணியால் சுற்றிக்கொண்டு, வயிற்றில் ஒத்தடம் தரலாம்.
இரைப்பை அழற்சி அல்லது செரிமானக்குறைபாடு இருந்தால், வயிற்று வலியுடன் புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் இருக்கும்.
English Summary
Causes of stomach pain and ways to prevent it