எலும்புருக்கி நோய் ஏற்பட காரணம் மற்றும் தடுக்கும் முறைகள்...!
Causes and prevention of osteoporosis
எலும்புருக்கி நோய் ஏற்படக் காரணங்கள் :
எலும்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்) என்பது குழந்தைகளில் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிப்பதாகும். குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் அதிகம் காணப்படுவது எலும்புருக்கி நோயாகும். உயிர்ச்சத்து டி குறைபாடு மிக முக்கியமான காரணமாகும். ஆனால் உணவில் உள்ள கால்சியம் குறைபாடும் எலும்புருக்கி நோயை ஏற்படுத்தும்.

உணவில் உள்ள கால்சியம் சரியான முறையில் உறிஞ்சப்படாமல் இரத்தத்தில் கால்சிய பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் எலும்பு மற்றும் பல் குறைபாடுகள் மற்றும் நரம்புத் தசை அறிகுறிகள் தோன்றும்.
உதாரணமாக அதிகப்படியான உணர்ச்சிவசப்படுதலும்.
முதுகெலும்பு வளைதல், கால் வளைதல், எலும்பு முறிவடைதல் இந்நோயால் ஏற்படும்.
எலும்புருக்கி நோய் வராமல் தடுக்கும் முறைகள் :
சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் புற ஊதாக்கதிர் பி வெளிச்சம் நம் உடலில் படவேண்டும்.
உணவில் போதுமான அளவு கால்சியம் மற்றும் பாஸ்ஃபரஸ் ஆகியவை எலும்புருக்கி நோயைத் தவிர்க்கும்.
நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும்.
சுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயை தவிர்க்க முடியும்.
English Summary
Causes and prevention of osteoporosis