மன அழுத்தத்தை போக்கும் வெற்றிலை.! இன்னும் என்னென்ன நோய்க்கு பயன்படுகிறது? - Seithipunal
Seithipunal


அனைத்து சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகள் வரை வெற்றிலை என்பது மிக முக்கியமான ஒன்று. இது சுவை நிறைந்தது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நிறைந்தது. இந்த வெற்றிலையில் எவ்வளவு நன்மைகள் இருக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். 

* வெற்றிலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள அமில அளவைக் குறைப்பதால், வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது மலச்சிக்கலைப்போக்க உதவுகிறது. 

* வெற்றிலையில் நுண்ணுயிர்கள் அதிகம் உள்ளதால், வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. பற்களில் மஞ்சள் கறை, தேய்மானம், ப்ளேக் ஏற்படுவதை தடுக்கிறது. பல் வலி, ஈறுகளில் வலி, வீக்கம் மற்றும் வாயில் ஏற்படும் தொற்று ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது.

* இருமல், வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா போஉள்ளிட்ட வியாதிகளை வெற்றிலை கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள உட்பொருட்கள் சுவாசப்பாதையில் உள்ள நெரிசலைப் போக்குகிறது. சுவாசத்தை மேம்படுத்துகிறது.

* வெற்றிலையை மெல்லும்போது மனஅழுத்தத்தில் இருந்து ஆறுதல் கொடுக்கிறது. பதற்றத்தைப் போக்குகிறது. உடல் மற்றும் மனதுக்கும் இதமளிக்கிறது. வெற்றிலையை மென்று உண்பதால், ஒட்டுமொத்த மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

* அதுமட்டுமல்லாமல் வெற்றிலையை சாப்பிடுவதால், தலைமுடி அடர்த்தி அதிகரிக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

betel leaf benefits


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->