வெட்டிவேரில் உள்ள மருத்துவ பயன்கள்!! எதற்கெல்லாம் உபயோகப்படுத்தலாம் தெரியுமா?!
benefits of vetti veru
கோடையில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்கும். வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் உடல் சூடும், தாகமும் தணியும். மேலும் அந்நீரை குடிப்பதால் காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்றவை குறையும். மேலும் உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி உற்சாகத்தை அளிக்கும்.
வெயில் காலத்தில் உண்டாகும் அதிக வியர்வை மற்றும் அரிப்பிற்கு வெட்டிவேரை நீரில் ஊறவைத்து, அரைத்து குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். தீக்காயங்களில் வெட்டிவேரை அரைத்து பு சினால் காயங்கள் விரைவில் குணமாகும். கால் எரிச்சல், கால் வலி போன்றவற்றிற்கும் வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் இட்டு காய்ச்சி, இரண்டு நாட்கள் கழித்து வடிகட்டி தொந்தரவு தரும் இடங்களில் பூசலாம்.

காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை நீரில் இட்டு கொதிக்கவைத்து பருகவேண்டும். அந்த நீரை பருகுவதால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது. சிறு சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும்.
வெட்டிவேரில் இருந்து நறுமண எண்ணையும், மருந்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகிறது.இந்த வெட்டி வேர் எண்ணெய் மனதை அமைதிப்படுத்தி மனநோய்க்கு மருந்தாகின்றது. வெட்டி வேர் மருந்து பொருட்களிலும், குளியல் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. வெட்டிவேரால் சருமத்திற்கு பொலிவும், அழகும் கிடைக்கும்.

கூந்தல் தைலம், சோப்பு, வாசனை திரவியங்கள் போன்றவைகளும் வெட்டிவேரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. கோடை காலத்தில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க வெட்டிவேரை தட்டி, வெட்டி வேர் விசிறி போன்றவைகளும் தயாரித்து பயன்படுத்தப்படுகின்றன. இனி, வெப்பத்தை தணிப்பதற்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பனங்களுக்கு பதிலாக வெட்டிவேர் தண்ணீரை பயன்படுத்துவோம்