நோய்களை அடித்து விரட்டும் வசம்பு - எப்படி பயன்படுத்துவது?
benefits of vasambu
மருத்துவ குணமுடைய வசம்பு கார்புச் சுவையுடன் வெப்பத்தன்மை கொண்டது. வசம்பு பொடி அரை ஸ்பூன் எடுத்து அதனை அருகம்புல் சாற்றில் கலந்து 30 நாட்கள் பருகி வர வேண்டும் திக்கி பேசுவது தீரும்.
சுடுதண்ணீர் ,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.
வசம்பு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொற்று நோய்கள் நீங்கும்.
மனிதருக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் வசம்பு தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பயன்படுகிறது .
பசியை கொடுத்து, சோம்பலை நீக்க வசம்பு முக்கியமாக பயன்படுகிறது.
அதிமதுரம் சிறிதளவு அதே அளவு வசம்பு சேர்த்து நசித்து ஒரு டம்ளர் நீரில் காய்ச்சி 20மில்லி காலை, மாலை இரண்டு நாள் பருக கொடுத்தால் குழந்தை காய்ச்சல் சரியாகும்.
வசம்பு மற்றும் லவங்கத்தை அம்மியில் நசித்து இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதித்து ஆறியபின் காலை மாலை 50 மில்லி பருக காலரா சரியாகும்.
வசம்புடன் கடலை மாவு, மஞ்சள் சேர்த்து அரைத்து பொடி ஆக்கி குளியல் பொடியாக்கி, பயன்படுத்தினால் சர்மா ஆரோக்கியம் காக்கப்படும்
வசம்பை அளவோடு மருந்தாக பயன்படுத்துவது அவசியம். ஒரு கிராமைத் தாண்டினால் வாய் குமட்டல் மற்றும் வாந்தி உண்டாகும்.