சப்போட்டா பழத்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


சப்போட்டா பழத்தில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சப்போட்டா பழமானது அதிகளவு கொழுப்புகளினால் வரும் பிரச்சனைகள் உள்ள நபர்களுக்கு இயற்கையான மருந்து என்றும் கூறப்படுகிறது.

தினமும் இரண்டு சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வந்தால் இதயம் சம்பந்தமான கோளாறுகளை சரி செய்து, இதயத்தை பாதுகாக்கும். சப்போட்டா பழத்தின் சாறுடன் சிறிதளவு தேயிலை சாறு சேர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த பேதி உள்ள நபர்களுக்கு இரத்த பேதியானது குணமாகும்.

சப்போட்டா பழத்தின் சாறை பருகி வந்தால் கோடை காலம் மட்டுமல்லாது பிற காலத்திலும் ஏற்படும் உடல் சூடு மற்றும் தாகத்தை தனித்து நமது உடலை பாதுகாக்கிறது. சப்போட்டா பழத்தின் சாற்றை பருகி வந்தால் இரவில் தூக்கம் இல்லாமல் அவதியுறும் நபர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.

தினமும் தூங்குவதற்கு முன்னர் சப்போட்டா பழத்தின் சாறை அருந்த வேண்டும். சப்போட்டா பழத்தின் சாற்றை அருந்துவதன் மூலமாக ஆரம்பகால காசநோய் பிரச்சனைகள் குணப்படுத்தப்படும் மற்றும் மூல நோய் உள்ளவர்களுக்கு இந்த பழச்சாறு சிறந்த மருந்தாகும்.

சப்போட்டா பழத்தின் சாற்றை அருந்துவதன் மூலமாக பித்தமானது குணமாகும். மேலும்., ஒரு தே.கரண்டி சீரகத்தை மென்று விழுங்கி, சப்போட்டா பழத்தின் சாற்றை பருகி வர பித்தம் மற்றும் பித்த மயக்கம் போன்ற பிரச்சனைகள் தீரும். சப்போட்டா பழத்தின் சாறுடன் சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து பொடியாக்கி காய்ச்சி குடித்து வர காய்ச்சலானது குணமாகும்.

இதனை அடிக்கடி சாப்பிட்டு வருவதற்கு குடல் புற்றுநோய் பிரச்சனைகள் குணமாகும். சப்போட்டா பழத்தில் இருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களின் காரணமாக எலும்புகளானது வலுப்பெறும். இந்த பழச்சாறுடன் எலுமிச்சம்பழத்தை சாறை சேர்த்து பருகி வர சளி பிரச்சனை குணமாகும். சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலின் அழகானது மெருகேறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of sapota fruit


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->