கஸ்தூரி மஞ்சளின் நற்குணங்கள் என்னென்ன?..!
Benefits of kasthuri manjal Health Tips
இன்றளவு பலராலும் கஸ்தூரி மஞ்சள் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விட மனம் அதிகம் கொண்டது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை சரி செய்யும் குணம் கொண்டது. காயம், மூக்கில் ஏற்படும் நோய்கள், குன்ம வயிற்று வலி, கட்டிகள் சரியாக, தேமல் சரியாக என பல பிரச்சனைகளுக்கு கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது.
வாசனை பொடிகள் தயார் செய்யவும், குளிப்பதற்கு முன்னதாக தேய்க்கப்படும் சில வகையான தைலங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இளம்பெண்களுக்கு மேல் உதட்டு பகுதியில் வளரும் உரோமத்தை நீக்க உதவி செய்கிறது. முகம் பொலிவுபெறவும் உதவுகிறது.

கஸ்தூரி மஞ்சள் கிழங்கை பொடியாக்கி உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. கரப்பான் புண்கள் விரைவில் சரியாகும். கஸ்தூரி மஞ்சளாய் தேனில் கலந்து சிறிதளவு சாப்பிட்டால் குன்ம நோய்கள் மற்றும் வயிற்று வலி சரியாகும். வெங்காய சாற்றி குழைத்து கட்டிகள் மீது பூசினால், கட்டிகள் உடையும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Benefits of kasthuri manjal Health Tips