பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவ பயன்கள்..! - Seithipunal
Seithipunal


பீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், மலச்சிக்கலை குணப்படுத்தி வயிற்றை ஆரோக்கியமாக வைக்கும். உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும், எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாக்கும்.

முள்ளங்கி: முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதை சமைக்கும்போது ஒருவகை வாடை வரும் எனவே பலர் இதை வெறுத்துவிடுகின்றனர். ஆனால் இதன் மருத்துவ பயன்களை உணர்ந்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயை குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது. முள்ளங்கி சூப் குடித்தால் நரம்பு சுருள்கள் நீங்கும். அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும் தாது உப்புகளும் நிறைந்துள்ளது.

கேரட்: காய்கறிகளில் மிகவும் சுவையானது கேரட். கேரட்டில் வைட்டமின் பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரட் சாப்பிடுவதால் கண்பார்வை கூர்மையாகும். எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றுநோய் மற்றும் மாலைக்கண் நோய் வருவதை தடுக்கலாம்.

இஞ்சி: இஞ்சியானது சமையலில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது. இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும். பசியைத் தூண்டும், அஜீரணத்தை போக்கும், கபத்தை குணப்படுத்தும், ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும். அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும். உருளைக்கிழங்கில் உடலுக்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது. மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் ஏற்படும் வீக்கத்தையும், அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணப்படுத்துகிறது. மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.

கருணைக்கிழங்கு: கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும். இதை சமைக்கும் போது இதனுடன் சிறிது புளியை சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

benefits of grown up from under sand


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->