தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பில்லை சாப்பிடுவதால் உண்டாகும் அதிசயம்!
வெறும் வயிற்றில் தினமும் 3 மாதங்களுக்கு கறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் அதிசயம்
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10கறிவேப்பிலையையும், மாலையில் 10இலையையும் பறித்த உடனேயே வாயில்போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நீரிழிவுநோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின்அளவு குறையும்.
நரை முடி உள்ளவர்கள் உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் நரை முடி மறையும்.அதே போல் கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும்.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம்செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராகவைத்திருக்கும்.
வெறும் வயிற்றில் தினமும் 3 மாதங்களுக்கு கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும். அத்துடன் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும்.
சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும், வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்றஉயிர்சத்துக்களும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளன.
கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்னவெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்குஅரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதியஉணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல்,மனஇறுக்கம், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும்உடலை புத்துணர்வு பெறச் செய்து ஞாபக சக்தியையும் தூண்டும்.
ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால்எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.அதே போல் கருவேப்பில்லை சாற்றை சிவப்பரிசியில் ஊற்றி கஞ்சி குடித்தால் உடலின் கொழுப்புச் சத்து குறையும்.
சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதைஅவர் நாவினால் உணர முடியாது. இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி,சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்துசூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாவிற்கு சுவையை உணரும்தன்மை கிடைக்கும்.
மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால்போதை உடனே குறையும்.