பீட்ரூட் சாறை குடித்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


நமது உடலுக்கு வலுசேர்க்கும் பொருட்கள் குறித்து நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், பீட்ரூட் சாறினை அருந்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து இன்று காணலாம். பீட்ரூட்டில் இரும்புசத்து, போலேட், விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. 

நமது உடலில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடு ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலமாக ஆண்மையும் அதிகரிக்கும். கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் பீட்ரூட் சாறை குடிப்பதால் புத்துயிர் பெரும்.

இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அது ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும். பீட்ரூட் சாறு பருகும் பட்சத்தில் ரத்த அழுத்தத்தை சீராக வைத்து ஆண்மை குறைபாடு பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்கிறது. 

பீட்ரூட் சாறுடன் ஆப்பிள், ஆரஞ்சு அல்லது இஞ்சி போன்றவற்றின் சாறையும் சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை பெறலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களின் சர்க்கரை அளவை பராமரிக்கிறது. நமது உடல்நலம் மேம்படுவதோடு கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் சரியாகும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits of Beetroot Health tips Today


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->