காபி அதிகம் குடிப்பவரா நீங்கள்? உங்கள் மூளைக்கு ஆபத்து: ஏஐ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Are you a heavy coffee drinker Your brain is at risk Shocking information from AI study
உறக்கத்தை மேம்படுத்த நினைக்கும் காபி பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி! செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நரம்பியல் தொழில்நுட்பத்தின் வழியே, காஃபின் – பகலில் உங்களை விழிப்பாக வைத்தாலும், இரவில் உங்கள் மூளையின் மீள்பெறும் செயல்பாடுகளை கெடுக்கும் என ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
‘Nature Communications Biology’ இதழில் ஏப்ரல் மாதம் வெளியான ஆய்வில், மாண்ட்ரீல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஃபிலிப் தோல்கே, கரீம் ஜெர்பி மற்றும் ஜூலி கேரியர் ஆகியோர் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மூளையின் ‘சிக்கலான தன்மை’ பாதிக்கப்படுகிறது!
அறிவியலாளர்கள் AI மற்றும் EEG (Electroencephalography) கருவிகளை பயன்படுத்தி, காஃபின் இளைய வயதினரின் மூளையை உறக்கத்தில் எவ்வாறு தாக்குகிறது என்பதை ஆராய்ந்தனர். அவர்கள் கண்டறிந்தது:
“மூளையின் சிக்கலான தன்மை” என்பது இசைக்குழுவில் இசைக்கருவிகள் ஒத்துழைப்பது போல ஒரு நிலை. இது குறைவாக இருந்தால் செயல்பாடுகள் நடக்காது; அதிகமாக இருந்தால் குழப்பம். சமநிலையில் இருந்தால் தான் மூளை சிறப்பாக செயல்படும்.
உறக்க அலைகளில் மாற்றம்
காஃபின் உட்கொண்ட பின், ஆய்வுக்குட்பட்டவர்களின் மூளையின் மின்சொறி அலைகள் மாற்றமடைந்தன:
இதன் விளைவாக, உறக்கத்தின் போது மூளை முழுமையாக ஓய்வெடுக்க முடியவில்லை என்றும், நினைவக செயல்பாடுகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வயதுப்படியான தாக்கங்கள்
20 முதல் 27 வயதுடைய இளம் வயதினரிலும், 41 முதல் 58 வயதுடைய நடுத்தர வயதினரிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில்:
முடிவில்...
இந்த ஆய்வு, ஒருவேளை நம்மை விழிப்பாக வைத்திருக்கும் காஃபின், இரவில் மூளைக்கு தேவையான ஓய்வை பறிக்கக்கூடும் என்பதை எச்சரிக்கிறது. இது மெமரிஸ், கற்றல் திறன், மற்றும் புத்துணர்வு போன்ற பல நுண்ணிய செயல்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உறக்கத்தின் தரத்தில் கவனம் செலுத்த விரும்பும் அனைவருக்கும், காஃபின் பயன்பாட்டில் நேரத்தையும் அளவையும் கட்டுப்படுத்துவது அவசியம் என்பதே இந்த ஆய்வின் முக்கியப் பயனுரை ஆகும்.
English Summary
Are you a heavy coffee drinker Your brain is at risk Shocking information from AI study