கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 முக்கிய காய்கறிகள்! குழந்தைக்கும் ஏராளமான சத்துக்கள் கிடைக்குமாம்..! - Seithipunal
Seithipunal


கர்ப்பகாலத்தில் தாயின் உணவு பழக்கம், குழந்தையின் வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும் முக்கிய அம்சமாகும். அதனால் இந்த காலத்தில் ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது மிக அவசியம். அதிலும் குறிப்பாக காய்கறிகள் தினசரி உணவில் முக்கிய இடம் பெற வேண்டும்.

அனைத்து காய்கறிகளும் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் என்றாலும், சில காய்கறிகள் கர்ப்பிணி பெண்களுக்கு அதிரடி ஆரோக்கிய பலன் அளிக்கும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

முதலில், கீரை மற்றும் முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள். இதில் வைட்டமின் A, C, K, E, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், நார்ச்சத்து என பல முக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொண்டு, கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கும், பிறப்பு குறைப்பாடுகளைத் தடுக்கவும் பெரிதும் உதவுகின்றன.

அடுத்ததாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு. இதில் வைட்டமின் A, B, C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, குழந்தையின் நரம்பு மற்றும் கண் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது.

மூன்றாவது பீட்ரூட். இதில் அதிக நார்ச்சத்து, இரும்பு, ஃபோலேட், மற்றும் வைட்டமின் C உள்ளது. இது இரத்தச்சோகையைத் தடுக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

நான்காவது குடைமிளகாய். இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக வைத்துக்கொண்டு, கர்ப்ப காலத்தில் பொதுவாக வரும் மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும். மேலும் இதில் இருக்கும் வைட்டமின் C உடலில் இரும்பு சத்து உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது.

ஐந்தாவது ப்ரோக்கோலி. இதில் வைட்டமின் K, C மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளன. இது தாயின் உடல் நலத்துக்கும், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. குறிப்பாக இதில் உள்ள ஃபோலேட், நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் முக்கிய அம்சமாகும்.

சுருக்கமாகச் சொன்னால், கர்ப்பகாலத்தில் கீரை, சர்க்கரைவள்ளி, பீட்ரூட், குடைமிளகாய், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக வளர உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5 important vegetables that pregnant women must eat The baby will also get plenty of nutrients


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?


செய்திகள்



Seithipunal
--> -->