“விஜயை சுற்றி தேவையில்லாத அரசியல் மவுஸ் உருவாக்கப்படுகிறது!”-தவெகவுக்கு வாக்கு வங்கி இல்லையே..அதிமுகவுக்குத்தான் நஷ்டம்?
An unnecessary political mouse is being created around Vijay Thaweka has no vote bank AIADMK is the one who is losing
தமிழக அரசியலில் நடிகர் விஜய் பெயர் வந்தாலே அரசியல் சூழல் கொதிக்கும் நிலை உருவாகி வருகிறது. ஆனால், அந்த சூழலை தேவையில்லாமல் சிலர் உருவாக்கி வருகிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்திருக்கிறார்.
ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், “கரூருக்கு சிபிஐ டீம் உடனே கிளம்பிச் செல்வது, விரைவாக விசாரணை தொடங்குவது — இது தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வாகத் தோன்றுகிறது. இதை தெளிவாக மக்களுக்கு விளக்க வேண்டும்,” என்று கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தது என்னவென்றால் — “இந்த சிபிஐ விசாரணை என்பது விஜய்மீது ஒரு அழுத்தம் போலவே தெரிகிறது. ஏனென்றால், இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய்க்கு ஆதரவு இருக்கிறது. அந்த ஆதரவு திமுகவுக்கு எதிராக போகும் என்பதால், அதைக் கட்டுப்படுத்த அரசியல் முயற்சி நடக்கிறது,” என்றார்.
அதே நேரத்தில், “இந்த கூட்டணி அரசியல் கணக்கில் விஜய் ஒருவித டிமிக்கி கொடுப்பார். அவர் இப்போ அரசியலில் இறங்க மாட்டார்; பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தான் அடுத்த பெரிய முடிவை அறிவிப்பார்,” எனவும் ஷ்யாம் கூறினார்.
இன்று அதிமுகவின் 54வது ஆண்டு விழாவும் நடந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, “நாம் எந்த சக்திக்கும் ஏங்கவில்லை” என்றாலும், விஜய் கூட்டணியில் சேர்வாரா என்ற சந்தேகம் அவருக்குள்ளே இருப்பது போல தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது — “விஜயைச் சுற்றி தேவையில்லாத ஒரு புதிய மவுஸ் உருவாக்கப்படுகிறது. இல்லாததை இருப்பதுபோல் காட்டும் ஒரு சினிமா அரசியல் நடக்கிறது. இது வருத்தமானது. கரூர் சம்பவத்துக்குப் பிறகு, விஜய்யின் சாயம் வெளுத்திருக்கிறது. ஏனென்றால், தாமே விஜய்யை ஆதரிக்கிறோம் என்று தவெக ரசிகர்களே இணையத்தில் பேட்டிகள் கொடுக்கிறார்கள். இதிலிருந்தே தவெகவினரின் அரசியல் அனுபவமின்மை வெளிச்சமாய் தெரிகிறது,” என்றார்.
“கரூர் நிகழ்வு விஜய்க்கு பெரும் நஷ்டம் தான். அது விஜய்க்கு நஷ்டம் என்றால், அதிமுகவுக்கும் நஷ்டமே. ஏனென்றால், அதிமுக கூட்டங்கள் ஒழுங்காக நடக்கின்றன. ஆனால் விஜய் கூட்டங்களில் ஒழுங்கு இல்லை. பொறுப்பை யாரும் ஏற்கவில்லை என்றால், அது விஜய்க்கு ஓட்டு வங்கி இல்லை என்பதற்கான அடையாளமே,” என்று அவர் தெளிவாக குறிப்பிட்டார்.
அவரது இந்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விஜயின் அரசியல் பாதையில் சிபிஐ விசாரணை, கூட்டணி கணக்கு, ரசிகர் கட்டுப்பாடு — எல்லாமே பேசப்படும் விஷயமாக மாறியுள்ளன.
English Summary
An unnecessary political mouse is being created around Vijay Thaweka has no vote bank AIADMK is the one who is losing