நாளை பாஜகவில் இணையும் தமிழ் நடிகர்! ஜேபி நட்டா முன்னிலையில் இணைப்பு!  - Seithipunal
Seithipunal


நாளை சென்னையில் நடைபெறும் துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தமிழகம்  வர வைக்கிறார். பாஜக தலைவர் தமிழகத்தின் வருகையின் பொழுது தமிழக பாஜகவில் முக்கியமான நபர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.பல முன்னணி தொழில் அதிபர்களை முயற்சித்த நிலையில் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தது என கூறப்படுகிறது. 

இந்த  நிலையில் தற்போது சிலர் பாஜகவின் இணைய முன் வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி தற்பொழுது ரஜினி ஆதரவாளராக இருந்த, காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  சென்னை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் பாஜகவில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

அதேபோல முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ காயத்ரி தேவியும் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிகம் பிரபலமாகாத திரைப்பட நடிகர் அம்சவர்தன் மற்றும் பிரபல மருத்துவர் ஒருவர் ஆகியோர் பாஜகவில் இணைவார்கள் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil actor Amshavarthan like join BJP


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal