போயஸ் கார்டன் இல்ல வாசலில்...! நடக்கப்போவது என்ன?! ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, நான்குவருட சிறைவாசத்திற்கு பின்னர், பிப்ரவரி 8 ஆம் தேதி பெங்களூரில் இருந்து புறப்பட்டவர்,   பிப்ரவரி 9ஆம் தேதி காலை சென்னை தி நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். பின்னர் சில மணி நேரம் ஓய்வு எடுத்த அவர், விசாரிக்க வந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசியுள்ளார். அந்த பிரபலங்களின் வரிசையில் ஜெயலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா தீபக் இருவரும் வந்துள்ளனர். 

தீபா தீபக் இருவரும் சசிகலாவுடன் சுமார் 3 மணி நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது சசிகலா சிறை சென்றது முதல் தமிழக அரசு போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு என்னவெல்லாம் செய்தது என்பது குறித்தும் தெரிவித்து இருக்கிறார்கள். நீதிமன்றம் சென்றும் பலனளிக்கவில்லை, தமிழக அரசு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பிறகு கூட எங்களுக்கு நியாயம் வழங்கவில்லை என்று சசிகலாவிடம் குமுறியுள்ளனர். 

\

எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட சசிகலா, தீபா தீபக் இருவருக்கும் சில முக்கியமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளார் என கூறப்படுகிறது. சசிகலாவின் ஆலோசனைப்படி, நாளை பிப்ரவரி 11 ஆம் தேதி போயஸ் கார்டன் ஜெயலலிதா இல்லத்தின் வாசலில் தீபாவும் தீபக்கும் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sasikala given some ideas to Deepa anf deepak


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal