பிரேமலதாவின் பிளான்.! ஏமாற்றத்தில் பாஜக.! ஏக கடுப்பில் திமுக.! திகைப்பில் அதிமுக.! - Seithipunal
Seithipunal


தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டத்தினால் அதிமுக அரசு மிகுந்த திகைப்பில் உள்ளது. 

சமீபத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய பொழுது,"வேல் யாத்திரை யால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்புகள் இருக்கிறது. எனவேதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். தடையை மீறி ஊர்வலம் நடத்தும் பொழுது அரசாங்கம் அதன் கடமையை நிச்சயம் செய்யதான் வேண்டும். யார் வேண்டுமானாலும் எந்த நிகழ்ச்சி வேண்டுமானாலும் பண்ணலாம். 

மக்களுக்கு இடையூறு இல்லாமலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமலும் சிறப்பான முறையில் செய்தால் நாங்கள் வரவேற்கத் தயா. மூன்றாவது அணி குறித்து இப்போதே கூற முடியாது. ஜனவரி அல்லது டிசம்பரில் இது குறித்து கேப்டன் அறிவிப்பார். ஆலோசனைக்கு பின்னர் தான் இது குறித்த விஷயங்களை நாங்கள் தெரிவிக்க முடியும். தற்போது அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். 

திமுக ஆட்சியில் இல்லை என்றாலும், மக்களின் மனங்களை திமுகதான் ஆள்கிறது என்று ஸ்டாலின் இதுகுறித்து மக்கள் தான் பதிலளிக்க வேண்டும் எடப்பாடியின் ஆட்சி நிறைவாக இருக்கிறது. என்று கூறவும் முடியாது. ஒன்றுமே செய்யவில்லை என்றும் கூற முடியாது. குறைகள் அந்த ஒரு நல்லாட்சி ஆகத்தான் தோன்றுகிறது." என்று கூறினார். 

இந்த நிலையில் திமுக மற்றும் பாஜகவை எதிர்ப்பதை போன்றும் அதேநேரத்தில் அதிமுகவை விட்டுக் கொடுக்காமலும் பிரேமலதா குழப்பத்துடன் பேசியிருப்பது தற்போது அந்த மூன்று கட்சிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பாஜகவுடன் மூன்றாவது அணி அமைக்கும் என்று தேமுதிக குறித்து எதிர்பார்ப்பில் இருந்த பாஜகவுக்கும் ஏமாற்றம் தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவது போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி அதிகப்படியான சீட்டுகளை பெற வேண்டுமென்பதே பிரேமலதாவின் திட்டமாம். எனவே, திமுக மற்றும் பாஜகவிடம் தேமுதிக விலை போகாது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

premalatha new plan about assembly election


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal