#கும்பகோணம் || மாற்று சாதி., ஓடிப்போய் திருமணம்.! விருந்துவைப்பதாக அழைத்து சகோதிரியை ஆத்திரம் தீர வெட்டி படுகொலை செய்த சகோதரன்.! முழுவிவரம்.! - Seithipunal
Seithipunal


கும்பகோணம் அருகே வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த சகோதரியையும், அவரின் காதல் கணவரையும், சகோதரர் மற்றும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருந்த உறவுக்காரர் சேர்ந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகே உள்ளது துளுக்கவெளி. இந்த கிராமத்தை சேர்ந்த சரண்யா (24 வயது) என்பவரும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் (31 வயது) என்பவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இருவரும் இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. கடந்த மாதம் சரண்யாவின் காதல் விவகாரம் வீட்டில் தெரிய வரவே, அவரின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு சரண்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்யா, கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, திருவண்ணாமலை சென்று மோகனை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சென்னையில் வசித்து வந்த அவர்களை, விருந்து வைக்க உள்ளதாக சகோதரர் சக்திவேல் வரவழைத்துள்ளார்.

அண்ணன் மேல் உள்ள பாசத்தால் நம்பி வந்த சரண்யா மற்றும் அவரின் காதல் கணவர் மோகன் இருவரும் சக்திவேல் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டு வாசலில் வைத்து இருவருக்கும் சக்திவேல் தண்ணீர் கொடுத்துள்ளார். இருவரும் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே, சக்திவேல் மற்றும் அவரின் மைத்துனர் ரஞ்சித் ஆகியோர் புதுமண தம்பதிகளை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சக்திவேல் மற்றும் ரஞ்சித்தை தேடிவந்தனர். இதற்கிடையே கும்பகோணம் காவல் நிலையத்தில் சக்திவேலும் ரஞ்சித்தும் சரணடைந்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kumpakonam Chozhavaram love issue murder case


கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா, டிடிவி தினகரன், திமுக ஆதாராவோடு ஓபிஎஸ் அரசியல் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு....
Seithipunal