முக்கிய அமைச்சர்களால் எக்கச்சக்க கடுப்பில் எடப்பாடி.! - சொந்த தொகுதியில் போட்டியிடுவதில் சிக்கல்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் பலர் தங்களுடைய சொந்த தொகுதியில் போட்டியிடாமல் தலைமையிடம் வேறு தொகுதிகளை கேட்டு கோரிக்கை வைத்து வருவதாகவும், பல்வேறு சிக்கல்களுக்கு நடுவில் அவர்களின் கோரிக்கையால் தலைமை எரிச்சல் அடைவதாகவும் தற்போது கூறப்படுகிறது. 

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொதுவாகவே, ஆளும் கட்சியின் மீது பொதுமக்களுக்கு ஏற்படும் அதிருப்தி தேர்தல் நேரத்தில் மிகப்பெரிய எதிரொலியை ஏற்படுத்தும். முக்கிய அமைச்சர்கள் சிலர் 10 ஆண்டுகளாக தங்களது தொகுதி பக்கம் தலை காட்டாமல் இருந்து வருவதாகவும், மீடியா வெளிச்சத்திற்காக பேட்டிகள் கொடுத்தாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றினார்கள் என்றால் இல்லை என்கின்றனர் தொகுதி மக்கள். 

இதனால் சொந்த தொகுதி மக்களுக்கு அதிமுக அமைச்சர்களின் மேல் நம்பிக்கை இல்லை என்றும், மீடியாவில் வெளிச்சத்தினால் ஏற்பட்டுள்ள நற்பெயரை தங்களுக்கு வாக்குகளாக மாற்றிக்கொள்ள அமைச்சர்கள் முடிவு செய்து வேறு தொகுதிகளில் போட்டியிட தலைமையிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

அதிலும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் நிறைய அமைச்சர்கள் பார்டர் பாஸ் செய்தவர்கள் தான். ஐந்து ஆண்டுகளுக்கே இந்த நிலை என்றால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் தோல்வியை தழுவி விடுவோம் என்ற அச்சம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. 

சமீபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் பேட்டி, இந்த தோல்வி பயத்தை எதிரொலிக்கும் விதமாகவே இருக்கிறது. அதில், "2016 தேர்தலில் தான் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், எனவே இந்த முறை போட்டியிட்டால் தோல்வியுற்று விடுவேன் என்றும் அதனால் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps get tension about ministers


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->