பெரும் சிக்கலில் அதிமுக அமைச்சர்கள்.! ஸ்டாலினுக்கு பயந்து பின்வாங்கும் எடப்பாடி&கோ.! பலம் பெருமா திமுக.?!   - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் குறித்த விவாதங்கள் தற்போது பின்னுக்குச் சென்ற நிலையில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இப்போதே பேசப்பட்டு வருகிறது. தமிழக தேர்தலை பொறுத்தவரை கூட்டணிக்கு மகத்தான பங்கு உண்டு. வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதில் கூட்டணி கட்சிகள் தான் பெரும் பங்கு வகிக்கும். 

தற்போது திமுக அதிமுக இரு கட்சிகளும் தங்களுடைய கூட்டணியில் யாரை வைத்திருக்கலாம் யாரை கழட்டி விடலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது அதிமுக அமைச்சர்கள் தங்களுடைய சொந்த தொகுதியில் இருந்து மாறி போட்டியிடலாம் என்று சில தினங்களுக்கு முன்பு கூறப்பட்டது. 

சொந்த தொகுதியை விட்டு வேறொரு தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் கூடுதல் வாக்குகளைப் பெற்று விடலாம் என்று அவர்கள் திட்டமிட்டதாக தெரிகிறது. ஆனால், இதற்கு அதிமுக தலைமை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சொந்த தொகுதியை விட்டு வேறு தொகுதிக்கு மாறும் பட்சத்தில் அமைச்சர்கள் சொந்த தொகுதியில் எதுவும் செய்யவில்லையா என்று திமுகவினர் பிரச்சாரத்தை கையில் எடுப்பார். எனவே அவர்கள் பேச இடம் தரக்கூடாது. எனவே அந்தந்த தொகுதிகளில் அமைச்சர்கள் போட்டியிட வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டது. 

ஆனாலும் அமைச்சர்கள் தொகுதிகளை மாற்றிக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர். கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் மத்தியில் அதிமுகவிற்கு ஆதரவு இருக்கிறது. எனவே, அந்தப் பகுதியில்தான் இந்த தொகுதி மாற்று விவகாரம் தீவிரமாக திட்டமிடப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து முதல்வரிடம் சில நிர்வாகிகள் முறையிட்ட போது இந்த தேர்தலைப் பொருத்தவரை நானே சொந்த தொகுதியில் போட்டியிடுவது சந்தேகம்தான் என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாக இருப்பதன் காரணமாக அதிமுகவினர் இவ்வாறான திட்டங்களில் ஈடுபட்டு இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi and ministers new plan about assembly election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->