கலைஞரின் வரலாற்றை வைத்து, ஸ்டாலின், உதயநிதிக்கு வைக்கப்பட்ட செக்! திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு!  - Seithipunal
Seithipunal


ஆளுநர் சொன்ன சமாதானத்தை ஏற்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கைவிட்டோம் என திருச்சியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் திமுக தலைமை அனுமதித்தால் இளைஞரணி சார்பில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக போராட தயார் என அறிவித்துள்ளார். 

திமுக தலைவர் ஸ்டாலினும், "தமிழக ஆளுநர் அவர்களிடம் இருந்து அழைப்பு வர, நானும் அண்ணன் டி.ஆர்.பாலு அவர்களும் சென்று கவர்னர் அவர்களைச் சந்தித்தோம். அப்போது ஆளுநர் அவர்கள் போராட்டத்தைப் பற்றி விளக்கமாக கேட்டார்கள். நானும் எடுத்துச் சொன்னேன். அதற்கு அவர், “இல்லை இல்லை தவறாக இந்த செய்தி வந்துவிட்டது. அந்த எண்ணத்தோடு அவர் சொல்லவில்லை” என்று சொன்னார்கள். நீங்கள் சொல்வதை எவ்வாறு எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்? மத்திய அரசு முறையான அறிவிப்பை வெளியிட்டால்தானே ஏற்றுக் கொள்ளமுடியும் என்ற அந்த சந்தேகத்தில் கேட்டபோது, ”நான் மத்திய அரசின் பிரதிநிதி. நான் சொல்வதை நம்புங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அதன்பிறகு நான் அறிவாலயத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது ஒரு செய்தி வருகிறது.என்னவென்றால், அமித் ஷா அவர்களே தனது ட்விட்டர் பக்கத்திலும் ஊடகங்களிலும் கவர்னர் என்ன சொன்னாரோ அந்த செய்தியை விளக்கமாக வெளியிட்டிருந்தார். பிறகுதான் நாங்கள் நம்பினோம். அதை முழுமையாக ஏற்றுக் கொண்டோம்" என கூறியுள்ளார். 

அதாவது இருவருமே அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்று தான் போராட்டத்தை ரத்து செய்துள்ளோம் என அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பு தான் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. அதாவது 2009-ல் இப்படித்தான் கலைஞர், ‘டெல்லி காங்.தலைமை இலங்கையில் போர் நிறுத்தம் செய்கின்றோம் என உத்திரவாதம் கொடுத்ததின் பேரில் உண்ணாவிரதத்தை கைவிடுகின்றோம்' என்று கூறினார். ஆனால் இறுதியில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலையானார்கள். 

இபபோதும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பும் அவ்வாறே இருக்கும் நிலையில், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டது போல, ஹிந்தியும் தமிழகத்திற்குள் வந்துவிடாது தானே?, அதற்கு என்ன உத்திரவாதம் அளிக்க முடியும், பெயருக்கு போராட்டம் அறிவித்து கலைஞர் கைவிட்டது போல, நீங்களும் கைவிடமாட்டீர்கள் என என்ன நிச்சயம் என கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk hindi protest issue controversy in social media


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->