அதிமுக தலைமையில் ஏற்படப்போகும் மாற்றம்.! ஓபிஎஸ்-க்கு அடித்த அதிர்ஷ்டம்.. முடிவுக்கு வரும் மோதல்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் ஆறு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சியும் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேபோல, திமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலின் போட்டியிட உள்ளார். ஆனால், அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக ஓபிஎஸ் போட்டியிடுவாரா? அல்லது இபிஎஸ் போட்டியிடுவாரா? என்ற கேள்வி கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் அதிமுக பொதுக்குழு கூட்டம், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்,  கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
 
அங்கு ஓபிஎஸ் வந்தபோது ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு, வருங்கால முதல்வர் ஓபிஎஸ் எனவும் அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். அதேபோல இபிஎஸ் வருகையின்போது, நிரந்தர முதல்வர் எடப்பாடி என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில் இத்தகைய இருவேறு கோஷங்களால் பரபரப்பு நிலவி வருகிறது. 

தற்போது அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ செல்வத்திற்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் விரைவில் முடிவு போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் செயலாளராக ஓ.பன்னீர்செல்வமும்,  முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியம் பொதுக்குழு மூலம் தேர்தெடுக்கப்படப்போவதாக தாவல் வெளியாகியுள்ளது. வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk cm candidate may be eps


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal