மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என யூ.ஜி.சி. அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


முதுநிலை ஆராய்ச்சி படிப்புகளை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில் எம்.பில்., பி.எச்.டி., முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், மாணவர்கள் www.ugc.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.

கல்வி உதவி தொகையானது முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 31,000 ரூபாயும், இதர செலவுகளுக்கு வருடந்தோறும் ரூ.12,000 வழங்கப்படும்.

இதேபோன்று, மூன்றாம் ஆண்டு முதல் மாதத்திற்கு 35,000 ரூபாய் அளிக்கப்படும் என்று யுஜிசி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UGC scholarship


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->