இன்று 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு பள்ளிகள் திறப்பு.!! - Seithipunal
Seithipunal


கோடை விடுமுறைக்கு பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் ஆரம்பமாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

காலை  9:10 மணி முதல் 4:10 மணி வரையில் எட்டு பாடவேளைகளாக ஒரு நாளைக்கு 7 மணி நேர வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அட்டவணைகள் பள்ளிக்கல்வித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டது. ஆனால், இது திட்டமிடலுக்கான நேரம்தான், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்m பள்ளி மேலாண்மை குழுவுடன் ஆலோசித்துm பள்ளிகளின் அமைவிடம் வகுப்புகள் தொடங்கும், முடியும்  நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பள்ளிகளும் காலை வணக்கம் கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை அதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today 1st to 10th class school reopen


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->