நாளை நடைபெறுகிறது குரூப்-1 முதல் நிலை தேர்வு.! 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டது.

இதில் 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியவை அடங்கும்.

இந்த பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 30-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. 

இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. மேலும் தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திற்கு சென்று இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group 1 Exam will be held tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->