பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடக்கம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2026-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான (TNEA) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (மே 3) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பி.இ., பி.டெக் மற்றும் பி.ஆர்க் படிப்புகளில் சேர www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்த ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வின் கீழ் 11 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாக மற்றும் உறுப்புக் கல்லூரிகள் எனப் பல கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டு தரவுகளின்படி 89 தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் 368 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இதில் பங்கேற்கின்றன.

முக்கியத் தேதிகள் மற்றும் வழிமுறைகள்: விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெறும். மாணவர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும். இதைத் தொடர்ந்து ஜூன் 8 முதல் ஜூன் 20 வரை இணையதளம் வாயிலாகச் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இறுதித் தரவரிசைப் பட்டியல் ஜூன் 29-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்கு உதவத் தமிழகம் முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 1800-425-0110 என்ற இலவச அழைப்பு மையத்தையும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த 2025-ஆம் ஆண்டு 2,20,841 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர், இது முந்தைய ஆண்டை விட 23.67% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNEA 2026 Online Registration for Engineering Admissions in Tamil Nadu Begins Today


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->