புதுச்சேரி நாளை முதலில், 30 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் வாக்கு எண்ணப்படும்..!
Starting tomorrow postal votes cast in all 30 constituencies of Puducherry will be counted
தமிழகம் ,கேரளா, அசாம், மேற்கு வாங்கல் ஆகிய 05 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடந்த ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 09-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 1,099 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதில், மொத்தம் 89.87% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணியும், காங்கிரஸ், திமுக கூட்டணியும், தவெக தனித்தும் களம் கண்டுள்ளன. இதில், என்.டி.ஏ. மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், நாளை (மே 4-ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன்படி, காலை 08 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில், 30 தொகுதிகளிலும் பதிவான தபால் வாக்குகள் காலை 08 மணி முதல் 08.30 மணி வரை எண்ணப்படும். அதனைத் தொடர்ந்து 08.30 மணி முதல் இ.வி.எம். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்றவாறு வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்று நிறைவடைந்ததும் முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்படவுள்ளது.
English Summary
Starting tomorrow postal votes cast in all 30 constituencies of Puducherry will be counted