குஜராத் பல்கலைகலகத்தில புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 'மோடி தத்துவங்கள்'; காங்கிரஸ் கடும் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எம்.எஸ். பல்கலைக்கழகம் தனது சமூகவியல் பாடத்திட்டத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக 'தேசபக்தி சமூகவியல்' என்ற தலைப்பில் புதிய பாடங்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் முதல் இந்த புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது.

ஆனால், இந்த பாடத்திட்டத்தில், பிரதமர் மோடியின் தலைமைத்துவ பண்புகளை விளக்கும் 'மோடி தத்துவங்கள்'மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூகப் பணிகள், உள்ளடக்கிய வளர்ச்சி குறித்த பாடங்கள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், சர்தார் வல்லபாய் படேல், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இது குறித்து சமூகவியல் துறைத் தலைவர் வீரேந்திர சிங் கூறுகையில், 'ஒரு தலைவரின் ஆளுமையை அவர் இருக்கும் போதே படிப்பது சிறந்தது. பிரதமர் மோடியின் மக்கள் தொடர்பு மற்றும் கொள்கை முடிவுகளை மாணவர்கள் ஒரு ஆய்வுப் பொருளாகப் படிப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்த பாடத்திட்டம் பி.ஏ. சமூகவியல் 04-ஆம் ஆண்டு மற்றும் எம்.ஏ. முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படவுள்ளது. ஆனால், கல்வித்துறையில் அரசியல் புகுத்தப்படுவதாக காங்கிரஸ் தலைவர் தாரிக் அன்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; சுதந்திரப் போராட்டத்தில் எவ்வித பங்களிப்பும் செய்யாத, தியாகங்கள் புரியாத அமைப்புகளைப் பாடப்புத்தகங்களில் புகழ முற்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அத்துடன், நாட்டில் நிலவும் கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழல் போன்ற முக்கிய பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மோடி தத்துவங்கள் போன்ற பாடங்கள் கொண்டு வரப்படுகின்றன என்றும் சாடியுள்ளார்.

அதாவது, ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தைப் பல்கலைக்கழகங்கள் மூலம் மாணவர்களிடம் திணிப்பது கல்வித்துறையின் நடுநிலைத்தன்மையைச் சீர்குலைக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி ஆயோக் திட்டங்களின் போது மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையிலேயே இந்தப் பாடங்கள் உருவாக்கப்பட்டதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress strongly condemns the inclusion of Modis philosophies in Gujarat Universitys new curriculum


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->