9 முதல் 11 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி.! அறிவிப்பாணை வெளியிட்டு உறுதிசெய்த அரசு.! - Seithipunal
Seithipunal


9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமலே, அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு தற்போது அரசு ஆணை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆகிய கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் நிலை ஏற்படவில்லை. 

எனவே, கடந்த ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், தற்போது இந்த ஆண்டும் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்வுகள் நடத்தப்படுமாலேயே தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

ஆனால், மாணவர்கள் அனைவரும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இத்தகைய சூழலில், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn Govt statement about 9th To 11th students pass


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->