மாதம் ரூ.35,400 சம்பளம்! தமிழக அரசு மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் பணி - மிஸ் பண்ணிடாதீங்க!
TN Govt Hospital Lab Technician job july 2025
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (Lab Technician Grade-III) பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் விபரம்:
-
அறிவிப்பு எண்: 11/MRB/2025
-
மொத்த காலியிடங்கள்: 60
-
சம்பள அளவு: ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை
-
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் டிஎம்எல்டி (DMLT) படிப்பு முடித்திருக்க வேண்டும்
-
உடல் நிலை: நல்ல உடல் ஆரோக்கியம் அவசியம்
வயது வரம்பு (1.7.2025 தேதிக்குப் பிறகு):
-
பொதுப்பிரிவு: 18 முதல் 32 வயது
-
மாற்றுத்திறனாளிகள் (பொது): 42 வயதுவரை
-
முன்னாள் ராணுவத்தினர்: 48 வயதுவரை
-
பிற இனக்குழுக்கள்: வயது வரம்பு கிடையாது
தேர்வு முறை:
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் டிஎம்எல்டி பாடப்பிரிவில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
-
பொதுப் பிரிவு, ஓபிசி: ரூ.600
-
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள்: ரூ.300
(கட்டணம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்)
விண்ணப்பிக்கும் முறை:
www.mrb.tn.gov.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 30.7.2025
English Summary
TN Govt Hospital Lab Technician job july 2025