CUET தேர்வு மையமாக திருவாரூர் தேர்வு.!
thiruvarur selected CUETA exam center
நடப்பாண்டுக்கான சியுஇடி மற்றும் பிஜி தேர்வுகளுக்கு, புதிய தேர்வு மையமாக திருவாரூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று என்.டி.ஏ அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;-
"2024 சியுஇடி மற்றும் பிஜி தேர்வுகளுக்கு, திருவாரூர் புதிய தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என என்.டி.ஏ அறிவித்துள்ளது. சியுஇடி பிஜி 2024 தேர்வுகளுக்கான தேர்வு மையமாக திருவாரூரை என்.டி.ஏ சேர்த்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே வேறு மையங்களைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்த மாணவர்கள், 09.02.2024 முதல் 11.02.2024 வரை திருத்துவதற்கான இணையதள பக்கத்தில், தங்கள் மையத்தை “திருவாரூர் (TN16)” என்று மாற்றிக்கொள்ளலாம்.
தேர்வு தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் என்.டி.ஏவின் இணையதளங்களான www.nta.ac.in மற்றும் https://pgcuet.samarth.ac.in ஆகியவற்றை தவறாமல் பார்வையிட வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
thiruvarur selected CUETA exam center