தனித்தேர்வர்களுக்கான தக்கல் பதிவு இன்று தொடக்கம்...!! - Seithipunal
Seithipunal


தமிழக பள்ளி கல்வித்துறையின் கீழ் 10, 11, 12ம் பொது தேர்வு எழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களுக்கு தக்கல் விண்ணப்ப பதிவு முறை இன்று துவங்க உள்ளது. அதன்படி நடப்பு கல்வாண்டு கல்வி ஆண்டிற்கான 10,11, 12ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விருப்பமுள்ள தனித்தேர்வர்களுக்கு கடந்த டிச.26ம் தேதி விண்ணப்ப பதிவு துவங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இந்த காலகட்டத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் இன்று முதல் ஜன.7ம் தேதி வரை இணையதளம் மூலம் தக்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். 11ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் என அனைவரும் 12ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்குனராக சேவை மையங்களுக்கு நேரில் சென்று தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு dge1.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Takkal registration for individual candidates starts today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->