சூப்பர் பா! இரு மடங்காக அதிகரித்த மாணவ சேர்க்கை... சென்னை மாநகராட்சி பள்ளிகளில் குவியும் மாணவர்கள்!!! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதல் தமிழகத்தில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த கோடை விடுமுறையான 36 நாட்களுக்குப்பின் தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ-மாணவிகள் காலை முதலே பள்ளிகளில் ஏராளாமானோர் குவிந்த வண்ணம் காணப்படுகிறது.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை இரு மடங்காக பெருகியுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 6000  மாணவ-மாணவியர் புதிதாக சேர்ந்தனர். ஆனால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் இதுவரை 16,490 மாணவ-மாணவியர் சேர்ந்துள்ளனர்.

இதில் சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Student enrollment has doubled Students flocking to Chennai Corporation schools


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->