98.3% உடன் சிவகங்கை முதலிடம்...! - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
Sivaganga tops with 98POINT3 PERCENTAGE 10th Class Public Examination Results
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், 2024-25ஆம் கல்வியாண்டிற்கான SSLC பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் ''அன்பழகனார்'' கல்வி வளாகத்தில் வெளியிட்டார்.

இந்தத் தேர்வில் 93.80 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதில் குறிப்பாக மாணவர்கள் 88.70 % மற்றும் மாணவிகள் 95.13 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். மாணவிகள் 4.14 % அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் பாடம் வாரியாக 100-க்கு 100 எடுத்த மாணவர்கள் விவரம்:-
- தமிழ் -8 பேர்,
- ஆங்கிலம்- 346 பேர்,
- கணிதம் - 1,996 பேர்,
- அறிவியல்- 10,838 பேர்,
- சமூக அறிவியல்- 10,256 பேர் ஆவர்.
முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்:-
- சிவகங்கை- 98.3 %,
- விருதுநகர்- 97.5%,
- தூத்துக்குடி- 96.8%,
- கன்னியாகுமரி 96.7 %,
- திருச்சி- 96.6 %.
முக்கியமாக சிவகங்கை இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது.
English Summary
Sivaganga tops with 98POINT3 PERCENTAGE 10th Class Public Examination Results