திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது மாற்றங்கள் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் இடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு அவரை பதிலில்.,

"கோடை விடுமுறை முடிந்து வரும் நாளை மறுநாள் (13-ஆம் தேதி) பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி திறக்கப்படும்.  பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழகத்தில் வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் தூய்மைப்பணிகளை முடித்து மாணவர்களை வரவேற்க தயார்படுத்த வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school open june 13


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->