இயற்கை மரணம் அடைந்தால் உதவித்தொகை…! யாரெல்லாம் விண்ணப்பிப்பது தெரியுமா…? - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்துவ அநாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் உள்ளிட்டோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

அரசின் இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

அப்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை, அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் உள்ளிட்ட அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

அவர்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இந்த நல வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் வழங்கப்படும்.

இதுமட்டுமல்லாமல், இந்த நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு விதமான உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. அதன் விவரம் பின்வருமாறு:- 

* கல்வி உதவித்தொகை 10ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்பு, தொழிற் கல்வி படிப்பு வரை 

* விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகையாக ரூ.1,00,000 வழங்கப்படும். 

* இந்த விபத்தின் மூலம் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகையாக ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வழங்கப்படும். 

* இயற்கை மரணம் அடைந்தால் உதவித்தொகையாக ரூ.20,000, ஈமச்சடங்கு உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்.

* நல வாரிய உறுப்பினர்களுக்கு திருமண உதவித்தொகையாக ஆண்களுக்கு ரூ.3,000, பெண்களுக்கு ரூ.5,000 வழங்கப்படும். 

* மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6,000, கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு உதவித்தொகையாக ரூ.3,000 வழங்கப்படும். 

* கண் கண்ணாடி உதவித்தொகையாக ரூ.500, முதியோர் ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 நலத்திட்ட உதவியாக வழங்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

scholarship announce to natural death peoples in tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->