அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராக "நோக்கம்" செயலி அறிமுகம்...!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறையிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரியவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.

கால மாற்றத்திற்கு ஏற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில் AIM TN என்ற யூட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சி காணொளிகளை பதிவேற்றம் செய்து வருகிறது.

அதன் நீட்சியாக இக்கல்லூரி போட்டி தேர்வு என செயலி ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது. "நோக்கம்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம்(TNUSRB), மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(SSC), வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), UPSC போன்ற அனைத்து நிறுவனங்களும் நடத்தும் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அன்றாடம் பதிவேற்றப்படும் பயிற்சி காணொளிகளை காண்பது அதற்கான பாட குறிப்புகளையும் செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் சிறப்பம்சமே மாதிரி தேர்வுகள் தான். ஒவ்வொரு பாடத்திலும் பல விதமான தேர்வுகள் நடத்தப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக் கொடுக்கப்படும். இது மாணவர்கள் தங்கள் தயாரிப்பின் நிலையை அவ்வப்பொழுது சுய மதிப்பீடு செய்து கொள்ள உதவும். "நோக்கம்" செய்தியை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் இந்த செயலியை பயன்படுத்தி பயன்படலாம் என அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nokkam app to prepare for govt competitive exams


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->