இணையதளத்தில் நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு சார்பில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை பெறுவதற்கும் 'நெட்' தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே உதவி பேராசிரியர்களாக பணிபுரியவும், மத்திய அரசின் உதவித்தொகையை பெறவும் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்கள் என்று மொத்தம் இரண்டு முறை கணினி மூலமாக நடத்துகிறது. 

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான நெட் தேர்வு நாளை முதல் ஆரம்பமாகி அடுத்த மாதம் 10-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக நடத்தப்பட உள்ள 57 பாடங்களின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த ஹால்டிக்கெட்டை தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மீதம் உள்ள பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணை மற்றும் ஹால்டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படப்படும்.

மேலும், இந்தத் தேர்வுக்கான கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

net exam hall ticket release on website


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->