2024ல் தேர்தல் வருதே! NEET, JEE, UGC-NET, CUET நுழைவு தேர்வுகள் எப்போது? முழு விவரம் இதோ! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடில் இருக்கும் தேசிய தேர்வுகள் முகமை நடத்தும் 6 வகையான நுழைவுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் 2024-2025 கல்வி ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு கால அட்டவணையின் படி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வரும் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. 

அதேபோன்று ஜே.இ.இ முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை முதற்கட்டமாகவும், பிறகு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு 2024 ஆம் ஆண்டு மே 15ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழகான  முதுநிலை படிப்பு நுழைவுத் தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் மார்ச் மார்ச் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பல்கலைக்கழக மானிய குழுவிற்கான நெட் தேர்வு 2024 ஆம் ஆண்டு ஜூன் 10ம் தேதி முதல் ஜூன் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

national examination agency 6 entrance exams date announced


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->