பட்டதாரி ஆசிரியர் பணிக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்? - இதோ உங்களுக்காக.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "தொடக்கக் கல்வித்துறையில் 2023-24-ம் ஆண்டில் ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் 1768 இடைநிலை ஆசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுகின்றனர். 

விண்ணப்பிக்கும் தேதி:- பிப்ரவரி 14-ம் முதல் மார்ச் 15-ம் தேதி வரை 

தேர்வு நடைபெறும் நாள்:- ஜூன் 23 

காலிப்பணியிடங்கள் விவரம்:- தமிழ் 19, சிறுபான்மை மொழி 20 இடங்கள் காலியாக உள்ளன. இவை தவிர புதிய இடங்களாக தமிழ் 1388, தெலுங்கு 75, உருது 35, கன்னடம் 2 

கள்ளர் நலப் பள்ளிகளில் 18, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 139, மலைவாழ் நல பள்ளிகளில் 22, மாற்றுத்திறன் கொண்டோர் நலப் பள்ளிகளில் 29 இடங்களும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 20, சிறுபான்மை மொழி உருது 1 

இந்த தேர்வு குறித்த முழு விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்  www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1  எழுதி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:- 53 வயது நிரம்பியவர்கள் பொதுப் பிரிவின் கீழும், இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் உள்ளவர்கள் 58 வயது வரை இருக்க வேண்டும். 

தேர்வுக் கட்டணம்:- பொது பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் ரூ.300 கட்டணம். இந்தத் தேர்வுக் கட்டணத்தை இணைய தளம் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். 

மேற்கூறிய அனைத்து தகுதிகளையும் உடையவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி தொடக்கக் கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்படும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

graduate teachers job application released


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->