10, +2 தேர்ச்சி போதும்... தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஓட்டுநர் மற்றும் சுருக்கெழுத்தர் பணி!
Driver and Typist job perambalur
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள கிருஷி விக்யான் கேந்திரா (ICAR-KVK) மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்போது ஓட்டுநர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள் விவரம்:
1. சுருக்கெழுத்தர் (Grade-III)
காலியிடம்: 1
தகுதி: +2 தேர்ச்சி, கணினி பரிச்சயம், நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்து திறன், தமிழில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18–27
சம்பளம்: 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.
2. ஓட்டுநர்
காலியிடம்: 1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம்.
வயது வரம்பு: 18–27 (SC/ST-க்கு 5 ஆண்டு, OBC-க்கு 3 ஆண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு சலுகை).
சம்பளம்: 7வது ஊதியக்குழு விதிமுறைப்படி.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வும் திறன்தேர்வும் (தட்டச்சு/ஓட்டுதல்) அடிப்படையில் நடக்கும். தேர்விற்கு அனுப்பப்படும் தகவல் தபால் மூலம் அறிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST பிரிவினருக்கு ரூ.250
மற்றவர்களுக்கு ரூ.500 (வங்கி வரைவேலை: ICAR-KVK, Valikandapuram, Perambalur எனப் பெயரிடவேண்டும்)
விண்ணப்ப முறை:
www.roeverkvk.res.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றுகளுடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
The Chairman,
ICAR - KRISHI VIGYAN KENDRA
Hans Roever Campus,
Valikandapuram,
Perambalur - 621115.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் கடைசி நாள்: 6.5.2025.
English Summary
Driver and Typist job perambalur