சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 60 இளநிலை பொறியாளர் உதவியாளர் பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
CPCL Recruitment 2026 Notification Released for 60 Jr Engineering Assistant Posts Apply Online by Today
இந்திய மத்திய அரசின் எரிசக்தி மற்றும் ஹைட்ரோ-கார்பன் செயலாக்கத் துறையின் கீழ் இயங்கும் முன்னணி 'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 60 இளநிலை பொறியாளர் உதவியாளர் (Junior Engineering Assistant-IV) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு (அறிவிப்பு எண்: 01 of 2026 - CPCL / HRD:03:055) வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் மற்றும் பிரிவுகள் விவரம்:
இவ்வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் 60 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இளநிலை பொறியாளர் உதவியாளர்-IV (உற்பத்தி / Production): 40 இடங்கள்
இளநிலை பொறியாளர் உதவியாளர்-IV (இயந்திரவியல் / Mechanical): 10 இடங்கள்
இளநிலை பொறியாளர் உதவியாளர்-IV (மின்சாரவியல் / Electrical): 5 இடங்கள்
இளநிலை பொறியாளர் உதவியாளர்-IV (கருவியியல் / Instrumentation): 5 இடங்கள்
கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் சம்மந்தப்பட்ட பொறியியல் பிரிவில் (Production, Mechanical, Electrical, Instrumentation) முழுநேர டிப்ளமோ (Diploma in Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.07.2026 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சட்டப்பூர்வத் தளர்வுகள் உண்டு.
தேர்வு முறை மற்றும் கட்டண விவரம்:
தகுதியான விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Written Test), திறன் தேர்வு (Skill Test) மற்றும் உடல் தகுதித் தேர்வு (Physical Fitness Test) ஆகிய படிநிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்சி (SC) மற்றும் எஸ்டி (ST) பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்:
தகுதியும் ஆர்வமும் உள்ள பொறியியல் டிப்ளமோ பட்டதாரிகள் CPCL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதமான cpcl.co.in வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30, 2026 (இன்று) என்பதால், விருப்பமுள்ளவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
English Summary
CPCL Recruitment 2026 Notification Released for 60 Jr Engineering Assistant Posts Apply Online by Today