இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது சென்னை புத்தக காட்சி.! - Seithipunal
Seithipunal


ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக காட்சியான சென்னை புத்தக காட்சி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் 45-வது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ஆம் தேதி முதல்லமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த புத்தக காட்சியில் இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளனர்.

மொத்தம் 800 அரங்குகளில் 10 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 19-வது நாளாக நடைபெறும் இந்த புத்தக காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை வாசகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தக காட்சி என்ற சிறப்பை பெற்ற பபாசியின் இந்த வருட சென்னை புத்தக காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

இதுவரை 12 லட்சத்திற்கும் அதிமானோர் வந்து சென்றுள்ளதாகவும், இன்று மாலை நிறைவு விழா நடைபெறுவதாகவும் பபாசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி. ஆர் மகாதேவன் கலந்து கொள்ள இருக்கிறார். பதிப்பக துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும், புத்தக காட்சி நடைபெற உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai book fair last day


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->