மத்திய அரசு வேலையில் சேர வேண்டுமா? - இதுவே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- "மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில் பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் கடந்த 26-ந் தேதி வெளியிட்டுள்ளது. 

பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் http://ssc.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி வருகிற 18-ந் தேதி ஆகும். மறுநாளான 19-ந் தேதி இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி. தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும். தமிழகத்தில் 8 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government job


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->