தேர்தலுக்கு கடைசி நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தவெக முன்வந்தது; எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை; சி.வி. சண்முகம் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த தமிழக தேர்தலில் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அதிமுக தனியாக 47 தொகுதிகளில் வெற்றிப்பெற்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்தக் கட்சிக்குள் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தனிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கும் தவெகவுக்கு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஆதரவு கொடுத்ததன் மூலம், ஆட்சியை அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை நிரூபிக்க இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் பெரும்பான்மை ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழகி வெற்றிக் கழகம் ஆட்சி உறுதியாகியுள்ளது.

இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் முதல்வர் விஜய் சந்தித்தார். இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமல், அக்கட்சியில் தற்போது தனிப் பிரிவாக செயல்பட்டும், தவெகவுக்கு ஆதரவு தருவோம் எனவும் அறிவித்த, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோரையும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பிலான எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். இதனால் அவர்கள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து அவர்களின் கட்சிப் பதவிகளை பறித்துள்ளார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், ''தேர்தலுக்கு கடைசி நேரத்தில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக இருந்தது. தவெக முன்வந்தபோது அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிமுக பல தேர்தல்களில் தோற்றாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதற்கு தலைவர்களே காரணம். தோற்றால் நிர்வாகிகள் மீதும், வெற்றி பெற்றால் தான்தான் காரணம் எனக்கூறுவதும் எப்படி நியாயம்?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என கூறினோம். அப்போதும் எடப்பாடி பழனிசாமி காதிலேயே அதை வாங்கிக் கொள்ளவில்லை. பின்னர் 2026 தேர்தலில் கூட்டணி அறிவித்தார். அதற்கான காரணத்தை தற்போது வரை அவர் கூறவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், 2026 தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்போம் எனத் தெரிவித்தோம். ஆனால், அப்போதும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல், தேமுதிகவுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு மாநிலங்களவை எம்.பி. சீட்டை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை. தேமுதிகவுக்கு கொடுக்காதது தவறு என்று நாங்கள் கூறினோம், அதையும் ஈபிஎஸ் கேட்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், என்றைக்கு கட்சிக்குள் முரண் வந்து பிளவை நோக்கி சென்றதோ அன்றே பொதுச் செயலாளருக்கான அதிகாரமும் பறிக்கப்பட்டுவிட்டதாகவும், எங்களை நீக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. இந்த நீக்கம் செல்லாது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும், அதற்கு பொதுக் குழுவை கூட்டச் சொல்லி தெரிவித்துவிட்டோம். எனவே இதன் பிறகு எங்களை நீக்குவது கழக சட்ட விதிகளுக்கு புறமானது. நீங்கள் அல்ல கடவுளே தடுத்தாலும் பொதுக் குழுவில் நாங்கள் பங்கேற்போம். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று சி.வி. சண்முகம்,  திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CV Shanmugam stated that while the TVK came forward to form an alliance with the AIADMK Edappadi Palaniswami did not accept it


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->