இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.! - Seithipunal
Seithipunal


இன்று சிபிஎஸ்இ பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஆரம்பமாக உள்ளது. இந்தத் தேர்வு காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு நிறைவடைய உள்ளது. இதில், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் ஏப்ரல் 2- தேதியுடனும், 10 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் மார்ச் 13-ம் தேதியுடனும் நிறைவடைய உள்ளது.

இந்த நிலையில், தேர்வு எழுதுவோருக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- "தேர்வர்கள் அரை மணி நேரத்துக்கு முன்னதாக வரவேண்டும். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை. வினாத்தாள் படிக்க 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும். மேற்கண்ட விதிகளை பின்பற்றி தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தேர்வு எழுத வரும் மாணவர்கள் மறக்காமல் தங்களது கையெழுத்து இடப்பட்ட அட்மிட் கார்டு மற்றும் ஏதாவது ஒரு போட்டோ ஐடி உள்ளிட்டவற்றைக் கொண்டு வர வேண்டும். அட்மிட் கார்டில் தேர்வுகளுக்கான சரியான நேரம் மற்றும் தேதிகள் குறிப்பிடப்பட்டிருக்கும். சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு தேவையான கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஸ்க்ரைப் ஏற்பாடு உள்ளது.

எழுதுகோல் உள்ளிட்ட தேர்வுக்கு தேவையான பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். தேர்வு மையத்தில் இருந்து கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் மட்டுமே தேர்வு மையத்தில் வழங்கப்படும். உடல்ரீதியான பிரச்சனைகள் உள்ள மாணவர்கள் தேவையான மாத்திரைகள் மற்றும் சிறு ஸ்னாக்ஸ் உள்ளிட்டவற்றை முன் அனுமதியோடு எடுத்து வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cbse exam start from today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->