#சற்றுமுன்: 7.5 சதவீத இடஒதுக்கீட்டால் அச்சம்..?! விடாப்பிடியாய் உயர் நீதிமன்றம்.?! ரத்தாகுமா இட ஒதுக்கீடு.?!  - Seithipunal
Seithipunal


மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமாக தமிழக அரசு அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தது. இந்தநிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு போடப்பட்டுள்ளது. 

இதுகுறித்த மனுவில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் காரணமாக நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நீட் தேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பலன் பெற்று இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மருத்துவராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்களின் தரம் பாதிக்கப்படும் என்றும், எனவே இதனை அவசர வழக்காக உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உறுதியாக மறுப்பு தெரிவித்து இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case against medical reservation on madras high court


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->