தமிழக மாணவர்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்த பள்ளி கல்வித்துறை.. வெளியான அறிவிப்பு ரத்து.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 26ஆம் தேதியன்று ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகப்பை இல்லாத நாளாக கடைபிடிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. தற்போது இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

புத்தகப்பை இல்லாத நாளன்று நாளன்று மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பரிசு பொருட்கள் வழங்க தமிழக அரசுக்கு ரூபாய் 1.2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நாட்களில் மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் மாடி தோட்டம் அமைப்பது, மூலிகை தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்துக் கொண்டிருந்தது. 

இந்நிலையில். பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தகப்பை இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவிட் 19 பெருந்தொற்று காரணத்தினால் பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால் மாணவர்களிடையே ஏற்பட்டு கற்றல் இழப்புகளை சரி செய்யவும் மற்றும் கற்றல் அடைவுத் திறன்களை மேம்படுத்தவும் வேண்டியுdrerதால் 26.02.2022 அன்று நடைபெறயிருந்த செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cancellation of notice by the education dept


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->