ஊர்க்காவல் படையில் சேரணுமா? இன்னும் 6 நாள் தான் இருக்கு.!! உடனே அப்ளை பண்ணுங்க.!!
Application invite for Krishnagiri friends of police job
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊர் காவல் படைக்கு ஆள் சேர்ப்புக்கான அறிவிப்பை கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்க்காவல் படை மண்டல தளபதி கௌஷிதேவ் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் "கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் உத்தரவின்படி ஊர்காவல் படையில் காலியாக உள்ள 24 ஆண்கள் 7 பெண்கள் என மொத்தம் 31 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ஊர்க்காவல் படையில் சேர்ந்து சமூக சேவை ஆற்றிட விருப்பமுள்ள ஆண்கள் பெண்கள் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது இதற்கான ஆட்கள் தேர்வு வருகின்ற 12.02.2024ம் தேதி காலை 8 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.
வயதுவரம்பு 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்டவர் ஆக கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் பெற வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் பட்டியில் அசல் மற்றும் இரண்டு செட் நகல் கொண்டு வர வேண்டும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் அலுவலகத்தில் தர வேண்டிய கடைசி நாள் 07.02.2024.

மேலும் விண்ணப்பங்களை பெறவும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் காவல் உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படை அலுவலகம், டோல்கேட் அருகில், பெங்களூர் ரோடு, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியில் ஊர்க்காவல் படை அலுவலகத்தை அணுகவும்.
விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 04343-238568, 94981 78922. குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்டவர்களாகவும் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படும்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Application invite for Krishnagiri friends of police job